சினிமா

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணை கேட்கிறார் நடிகர் திலீப்!

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணை கேட்கிறார் நடிகர் திலீப்!

webteam

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து மலையாள நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல மலையாள ஹீரோ, திலீப் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இப்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.  திலீப்புக்கு எதிரான சாட்சிகள், திடீர் பல்டி அடித்து வருவதால் போலீசார் திணறுகின்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று நடிகர் திலீப் கூறியுள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் 12 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கேரள தலைமை போலீஸ் அதிகாரி, லோக்நாத் பெஹெரா, கூடுதல் டிஜிபி சந்தியா ஆகியோரால்தான் இந்த வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் லோக்நாத் தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால்தான் பல உண்மைகள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தக் கடிதத்தை ஜாமினில் வெளியே வந்த அன்றே அவர் அமைச்சருக்கு அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.