சினிமா

நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை

நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை

webteam

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளிவந்துள்ள மலையாள நடிகர் திலீப்பிடம், காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர். 

நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திலீப்பிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள திலீப்பிடம், ஆலுவா காவல் கிளப்பில் வட்டார ஆய்வாளர் பைஜூ பவுலோஸ் தலைமையிலான காவல்துறையினர் காலை 10 மணி முதல் குறுக்கு விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு, நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.