சினிமா

நடிகர் திலீப் பாஸ்போர்ட் ஒப்படைப்பு

நடிகர் திலீப் பாஸ்போர்ட் ஒப்படைப்பு

webteam

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை 7 நாள் கெடுவில் கொச்சி அங்கமாலி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் 85 நாள்கள் சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமினில் உள்ளார் திலீப். இந்நிலையில் துபாயில் நடக்கும் தனது உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதித்து தனது பாஸ்போர்ட்டை வழங்கி உதவுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். அவரது மனுவை ஏற்ற கேரள உயர் நீதிமன்றம், திலீப் ஜாமினில் வெளிவந்தபோது ஒப்படைத்திருந்த அவரது "பாஸ்போர்ட்"டை ஏழு நாட்களுக்கு வழங்க கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேரில் ஆஜரான நடிகர் திலீப்பிற்கு ஏழு நாள் கெடுவில் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பாஸ்போர்ட்டை வழங்கியது.