சினிமா

5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ் வரவேற்பு

5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ் வரவேற்பு

webteam

5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பு விமர்சனங்களும் எழுந்தன.

இதனையடுத்து 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ''5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்; பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்; சமூகத்தில் சமத்துவ ஆரோக்கியம் நிலைபெறச் செய்ய உதவும். வாழ்த்துகள். நன்றி.'' என தெரிவித்துள்ளார்.