dorothy - dhanush imdb / Yogen Shah
சினிமா

Dorothy| ’டோரதி’ ஒரு மிகச்சிறந்த படைப்பு.. நடிகர் தனுஷ் பாராட்டு!

டோரதி திரைப்படம் கார்த்திக் சுப்புராஜிடமிருந்து ஒரு மிகச்சிறந்த படைப்பு டோரதி என தனுஷ் பாராட்டியுள்ளார்.

Rishan Vengai

கார்த்திக் சுப்புராஜின் 10வது படைப்பு ‘டோரதி’ 1990களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு, இளையராஜாவின் இசையுடன் உருவாகியுள்ளது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகள் பெற்ற இந்த படம் இன்று வெளியானது. வெளியீட்டுக்கு முன், துணிச்சலான, நெஞ்சைத் தொடும் கதைக்களம் மற்றும் தீவிரமான உணர்வுகளுக்காக நடிகர் தனுஷ் படத்தையும், அனைத்து நடிகர்களின் நடிப்பையும், பின்னணி இசையையும் புகழ்ந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் படம் டோரதி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

Dorothy

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியிருக்கும் டோரதி, இசைஞானி இளையராஜாவின் இசையில் 1990 காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது.

இந்தசூழலில் படம் வெளியீட்டுக்கு முன்பு, நடிகர் தனுஷ் டோரதி படத்தை பாராட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கார்த்திக் சுப்புராஜிடமிருந்து ஒரு மிகச்சிறந்த படைப்பு 'டோரதி' (Dorothy). துணிச்சலான மற்றும் நெஞ்சைத் தொடும் கதைக்களம்; எதார்த்தமான மற்றும் தீவிரமான உணர்வுகளைக் கொண்டது. இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா அவர்களின் பின்னணி இசை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்; இது அவரது ஒரு 'ருத்ரதாண்டவம்' போன்ற இசை அனுபவம். இப்படத்திற்காக, எனது அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.