சினிமா

”உங்கள் யூகங்கள் உண்மைதான்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறேன்” - தனுஷ் ட்வீட்

sharpana

நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணைவதை உறுதி செய்துள்ளார்.

மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில், தனுஷ் ‘ராக்கி’, ’சாணிக்காயிதம்’ உள்ளிட்டப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணையவுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இது 1950 ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை என்று சொல்லப்படுகிறது.

அருண் மாதேஸ்வரனின் முதல்படமான ‘ராக்கி’ நேற்று தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் ”ஆமாம். உங்கள் யூகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நான்தான்” என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இன்று தனுஷின் ‘அட்ராங்கி ரே’ டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.