சினிமா

தனுஷை பின்தொடரும் 50 லட்சம் பேர்

தனுஷை பின்தொடரும் 50 லட்சம் பேர்

Rasus

நடிகர் தனுஷை அவரது ட்விட்டர் பக்கத்தில் 50 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். 

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டவர் நடிகர் தனுஷ். கடந்த 2012-ஆம் ஆண்டு "3" படத்திற்காக இவர் பாடிய " கொலவெறி" பாடல் கோலிவுட் ரசிகர்களை தாண்டியும் உலகம் முழுவதும் பிரபலமானது. இதுமட்டுமில்லாமல், புதுப்படம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் வீடியோக்களை உடனுக்குடன் பதிவிடுவது என ட்விட்டரிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் தனுஷ்.

அவரை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. கோலிவுட்டில் அதிகபட்சமாக ஏ.ஆர்.ரஹ்மானை 14.8 மில்லியன்  ரசிகர்களும், ஸ்ருதி ஹாசனை 5.28 மில்லியன் ரசிகர்களும் பின்தொடர்கின்றனர். அதற்கு அடுத்தப்படியாக தனுஷைத்தான் 5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.