நடிகர் தனுஷின் 47-வது திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசந்த் ரவி நடித்துள்ள 'ராக்கி', செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் 'சாணிக் காயிதம்' படங்களை இயக்கி வருபவர் அருண் மாதேஸ்வரன். இவர் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு வசனம் எழுதியவரும் கூட.
அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் அருண் மாதாஸ்வரன், தற்போது தனுஷ் படத்தை இயக்குவதற்காக கதை சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் தனுஷ் தற்போது 'தி க்ரே மேன்' (The Gray Man) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு மூன்று தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்களுக்குப் பிறகே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.