சினிமா

தனுஷ், செல்வராகவன் காம்போவில் ‘நானே வருவேன்’ - கலர்புல்லான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தனுஷ், செல்வராகவன் காம்போவில் ‘நானே வருவேன்’ - கலர்புல்லான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

EllusamyKarthik

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சகோதரர்கள் இருவரும் மயக்கம் என்ன படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். 

V கிரியேஷன்ஸ் பேனரில் எஸ்.தாணு இந்த பதத்தை தயாரிக்கிறார். ‘புதுப்பேட்டை 2’  படத்தை திரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு இதுவும் கேங்ஸ்டர் படம் போலவே  இருக்கிறது. 

இயக்குநர் செல்வராகவன் அடுத்தடுத்த அறிவிப்புகளை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். முதலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வருவதை உறுதி செய்த அவர், அதில் தனுஷ் நடிக்கவுள்ளதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார். ஆனால், 2024 ஆம் ஆண்டுதான் அந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தார். அதனால் மூன்று வருடம் காத்திருக்க வேண்டுமே என்று ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் தனுஷுடன் இணைந்து மற்றொரு படத்தை எடுக்கவுள்ளதாகவும் அதற்கான போட்டோ ஷூட் குறித்த தகவல்களுடன் செய்தி வெளியானது. 

அதனையடுத்து, பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி தனுஷுடன் இணையவுள்ள தன்னுடைய 12 ஆவது படம் குறித்த டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று ட்வீட் செய்தார். நாளைக்கு தான் டைட்டல் அறிவிப்பு வெளியாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்று அது குறித்த ஒரு நினைவூட்டர் பதிவையும் ட்வீட் செய்திருந்தார். 

இந்நிலையில்தான், இன்று மாலையே செல்வராகவன் - தனுஷ் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு நானே வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நானே வருவேன் படத்தலைப்பில் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இரண்டிலும் தனுஷ் கிட்டத்தட்ட  மயக்கமென்ன படத்தின் தோற்றத்தில் இருக்கிறார். இது ஒரு கேங்ஸர் படம் என்றே தோன்றுகிறது. இதுவரை இந்தப் படம் தொடர்பாக நான்கு படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் 1992 ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற பெயரில் ஸ்ரீப்ரியா, ரஹ்மான் நடித்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.