சினிமா

நடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்

நடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்

webteam

நடிகர் பரத்திற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பாய்ஸ்’,‘காதல்’,‘வெயில்’ போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உயரம் தொட்டவர் நடிகர் பரத். இவருக்கும் ஜெஸ்லிக்கும் 2013ம் ஆண்டு செப்டம்பர் 9 தேதி திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி ஜெஸ்லியின் பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். பல் மருத்துவரான ஜெஸ்லியும் நடிகர் பரத்தும் பால்யகால நண்பர்கள். ஆகவே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனையொட்டி திருமணமும் நடந்து முடிந்தது. 

இந்நிலையில், பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், இரண்டு பண்டல் மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் இரண்டு இளவரசர்கள் பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மற்றும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகக் கூறியுள்ளார். பரத்திற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்த செய்தி சினிமா வட்டாரத்தில் கவனிக்கத்தக்க செய்தியாக மாறி இருக்கிறது.