சினிமா

கூட்ட நெரிசலில் ரசிகரை தாக்கிய நடிகர் பாலகிருஷ்ணா!

கூட்ட நெரிசலில் ரசிகரை தாக்கிய நடிகர் பாலகிருஷ்ணா!

webteam

கூட்ட நெரிசலில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகரும் ஹிந்துபுர் தொகுதி தெலுங்குதேச எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா நந்த்யால் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக அப்பகுதிக்கு சென்றார். அங்கு தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் அங்கு சென்ற நடிகர் பாலகிருஷ்ணாவைக் காண ஏராளமானோர் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணா அருகில் சென்று செல்ஃபி எடுக்க முற்பட்டார். அப்போது கோபமான பாலகிருஷ்ணா அந்த ரசிகரை ஓங்கி அறைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பின்போது தனது ஷூவை சரிசெய்து விடவில்லை என தனது உதவியாளரை தாக்கிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தனது ரசிகரை பாலகிருஷ்ணா அறைந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. 

பாலகிருஷ்ணா முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் மகன். தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி பாலகிருஷ்ணாவின் சகோதரியாவார். இந்த இரு சம்பவங்களுக்கு முன்பும் இதுபோன்ற சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்கியுள்ளார்.