சினிமா

அருண் விஜய்யின் ‘யானை’ டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஓடிடி தளம்

அருண் விஜய்யின் ‘யானை’ டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய ஓடிடி தளம்

sharpana

’யானை’ படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கிறது.

இந்த நிலையில், ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.