சினிமா

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி

newspt

தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒருவாரகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதலாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் தமிழ்திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், அர்ஜூன், விக்ரம், வடிவேலு மற்றும் இயக்குநர் சுராஜ் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி குணமடைந்தநிலையில் தற்போது அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.