சினிமா

காரைக்குடியில் நடைபெறும் ‘யானை’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்கு புறப்பட்ட அருண் விஜய்

காரைக்குடியில் நடைபெறும் ‘யானை’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்கு புறப்பட்ட அருண் விஜய்

sharpana

’யானை’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்குச் சென்றார் நடிகர் அருண் விஜய்.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, வில்லனாக நடிக்கும் கருடா ராமுக்கும் அருண் விஜய்க்குமான காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிலையில், ‘யானை’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடிக்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அருண் விஜய் உற்சாகமுடன் செல்லும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.