சினிமா

நடிகர் அக்‌ஷய் குமாரின் அம்மா காலமானார்

நடிகர் அக்‌ஷய் குமாரின் அம்மா காலமானார்

sharpana

நடிகர் அக்‌ஷய் குமாரின் அம்மா இன்று காலை உயிரிழந்தார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாரின் அம்மா அருணா பாட்டியா இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார் ”எனக்கு அனைத்துமாக இருந்தவர் என் அம்மா. அவர் மறைவால் தாங்கமுடியாத வேதனையை உணர்கிறேன். என் அம்மா அருணா பாட்டியா இன்று காலை இந்த உலத்தை விட்டு வெளியேறி, என் தந்தையுடன் வேறு உலகில் இணைந்துள்ளார். இந்தச் சூழலில் உங்களின் பிரார்த்தனைகளை நானும் எனது குடும்பத்தினரும் மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அக்‌ஷய் குமார் தனது அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை பிராத்தனை செய்துகொள்ளச் சொன்னார். அருணா பாட்டியா பாலிவுட் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.