நடிகர் அஜித் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படப்பிடிப்புத்தளத்தில் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.
மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகர் அஜித் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்குழுவினருடன் உற்சாகமுடன் உரையாடியுள்ளார். அதோடு, எடுக்கப்பட்டக் காட்சிகளையும் பார்த்து ரசித்து படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
படத்தை தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூரும் தனது ட்விட்டர் பக்கத்தில், “மரைக்காயர் படப்பிடிப்புத் தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த அஜித்துக்கு நன்றி. நீங்கள் எங்களைப் பார்க்க நேரம் எடுத்துக்கொண்டதும், எங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ கடந்த ஒரு வருடமாக வெளியீட்டீற்கு காத்துக்கொண்டிருக்கிறது. அதனால், மோகன்லாலுடன் அஜித் இருக்கும் வீடியோ எடுக்கப்பட்டு ஒன்று அல்லது ஒன்றரை வருடங்கள் இருக்கலாம். வீடியோவில் அஜித் ப்ளூ டிசர்ட்டில் இருக்கிறது. படக்குழு தற்போதுதான் அந்த வீடியோவை உற்சாகமுடன் பகிர்ந்துள்ளனர்.