’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3 ஆம் தேதி நிறைவடைகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு.
இன்னும் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்றுள்ளனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சியை தற்போது எடுத்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து தமிழகம் திரும்புகிறது படக்குழு. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்கலாமே: மீன்களில் ஃபார்மலின்... ஆபத்தான ரசாயனக் கலப்பை எளிதில் கண்டறிவது எப்படி? - A to Z கைடன்ஸ்