அஜித்தின் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட வீடியோ யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ’வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட்டார் போனி கபூர்.
”நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் மலைதான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்” என்று வில்லன் கார்த்திகேயா குரல் ஒலிக்க அஜித்தில் கால் தீப்பொறியுடன் பதிக்க யுவன் இசையும் சேர்ந்து கவனம் ஈர்த்தது ‘வலிமை’ கிளிம்ப்ஸ். அஜித் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘வலிமை’ கிளிம்ப்ஸ் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகள் அதாவது 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமுடன் கொண்டாடி வருகிறார்கள்.