சினிமா

ஜூலையில் வெளியாகும் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்?

ஜூலையில் வெளியாகும் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்?

sharpana

அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ஜூலையில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு அடிக்கடி ட்ரெண்ட் செய்தனர். இதனால், போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, கொரோனாவும் குறைந்துவிட்டதால் மீண்டும் வலிமை அப்டேட் கேட்கத்தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். கடந்தவாரம்கூட, இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். மேலும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டனர்.

இந்நிலையில், ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் சென்னை வரும் போனி கபூர் அஜித்தை நேரில் சந்தித்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத் தேதி, இன்னும் படமாக்காமல் இருக்கும் சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்புகள் குறித்தெல்லாம் பேசவிருக்கிறார். இந்த சந்திப்புக்குப்பின் ஜூலையில் ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.