2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கலைத்துறையில் நடிகர் அஜித்குமார் மற்றும் ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தாமுதரன், லட்சுமிபதி ராம சுப்பையர், சீனி விஸ்வநாதன் போன்றோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. அதில் அஜித், தாமு, அஸ்வின் உள்ளிட்ட அனைவருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.
விருதை வாங்குவதற்காக முகத்தில் அதீத மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்து சென்ற அஜித் குமார், கௌரவமாக பத்ம பூஷணை விருதை பெற்றுக்கொண்டார்.
அஜித்குமார் விருது வாங்குவதை பார்க்க சென்றிருந்த மனைவி, மகள், மகன் அடங்கிய குடும்பத்தினர் உணர்ச்சி பெருக்கில் பார்த்து மகிழ்ந்தனர். காதல் கணவர் அஜித் குமார் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதை பெற்றுக்கொண்டதை பார்த்த மனைவி ஷாலினி பூரித்து போனார்.