‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9 ஆம் தேதி துவங்கவுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். கடந்தவாரம் ஹைதராபாத்தில் ‘அஜித் 61’ படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் துவங்கியது. இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து தகவலை வெளியிடவில்லை படக்குழு.
பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கிறார். தற்போது கொரோனா விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளதால் ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகிறது. இதன்பிறகு,‘அஜித் 61’ படப்பிடிப்பு வரும் மார்ச் 9 ஆம் தேதி துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.