சினிமா

‘அபியும் அனுவும்’ மார்ச் 9 ரிலீஸ்

webteam

வரும் மார்ச் 9 அன்று ‘அபியும் அனுவும்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை பியாவும் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அபியும் அனுவும்’. இதனை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக சில திரைப்படங்களில் பணியாற்றியவர். இப்போது இவர் இயக்கியுள்ள அபியும் அனுவும் படத்தில் ரோகிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அபியும் அனுவும்’ டீசரை வெளியிட்டுள்ளார். மேலும் இதை அழகான காதல் கதை என்றும் குறிப்பிடுள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.