சினிமா

டப்பிங் பேசிய ஜெயம் ரவி மகன் ஆரவ்

webteam

நடிகர் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ் டப்பிங் பேசிய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமாக ”டிக் டிக் டிக்” உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். படத்தில் நிவேதா பெத்துராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் திரைப்படம். 

இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ஆரவ் "டிக் டிக் டிக்" படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார். டப்பிங்கின் போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  ஜெயம் ரவி ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் ஆரவ் ”டிக் டிக் டிக்”  படத்திற்காக டப்பிங் செய்வது தனக்குப் பெருமையாக உள்ளது என்றும் அதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறுப்பிட்டுள்ளார்.