Sitaare Zameen Par facebook
சினிமா

அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர்... யூடியூபில் பார்க்கலாம்! எப்போது?

இந்தியாவில் 100 ரூபாயை செலுத்தி இப்படத்தை யூ டியூபில் பார்க்க முடியும் என அமீர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

அமீர் கான் தயாரித்து நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை ஆகஸ்ட் ஒன்று முதல் யூடியூபில் பார்க்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 100 ரூபாயை செலுத்தி இப்படத்தை யூ டியூபில் பார்க்க முடியும் என அமீர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை யூ டியூபில் வெளியிடும் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளுக்கு வரமுடியாத நல்ல ரசிகர்களையும் படைப்புகள் எளிதில் சென்று சேர இம்முயற்சி உதவும் என அமீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரும்பிய மொழியில் படத்தைப் பார்க்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 38 நாடுகளில் இப்படத்தைப் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.