சினிமா

மோடியை மிஞ்சிய அமீர்கான்

மோடியை மிஞ்சிய அமீர்கான்

webteam

சீனாவில் உள்ள வலைதள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் அதிகம் பேர் பின்தொடர்ந்த இந்தியர் என்ற பெயரை மோடிதான் பெற்றிருந்தார்.தற்போது அதை விட அதிகம் பேரை ஈர்த்து அமீர்கான் மோடியை மிஞ்சியுள்ளார்.

அமீர்கான் நடித்த தங்கல் படம் உலகம் முழுவதும் வணிக ரீதியில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்தப் படம் மூலம் அமீர்கான் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளின் ரசிகர்களையும் கவர்ந்தார். சீனாவில் புதிதாக சுமார் 6 லட்சம் ரசிகர்கள் அவருக்குக் கிடைத்துள்ளனர்.சீன சமூக வலைதளம் ஒன்றில் அமீர்கானைப் பின் தொடர்வதாக 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் தெரிவித்துள்ளனர்.இது சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் ஆதரவை விட அதிகம்.அமீர்கான் நடித்துள்ள தங்கல் படம் சீனாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.