சினிமா

''அவர் குடும்பத்தில் ஒருவர்'': 25 வருடங்களாக உடனிருந்த அமீர்கானின் உதவியாளர் உயிரிழப்பு!!

''அவர் குடும்பத்தில் ஒருவர்'': 25 வருடங்களாக உடனிருந்த அமீர்கானின் உதவியாளர் உயிரிழப்பு!!

webteam

 இந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளர் அமோஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளரான அமோஸ், மாரடைப்பு காரணமாக திடீரென சரிந்து விழுந்தார், உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 25 வருடங்களாக அமீர்கானின் உதவியாளராக அமோஸ் இருந்து வந்தவர். அமோஸ் உயிரிழந்த தகவலை அமீர்கானின் நண்பர் ஹரீம் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், அமோஸ் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அமோஸின் உயிரிழப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என அமீர்கான் வருத்தம் தெரிவித்தார். அமீர்கானுக்கு அமோஸ் நெருக்கமானவர்.

உதவியாளர் என்பதையும் தாண்டி அமீர்கானின் குடும்பத்தில் ஒருவராகவே அமோஸ் இருந்தார். அனைத்து விஷயங்களிலும் அமீர்கான் மிகச்சரியானவராக இருந்தார் என்றால் அதற்கு அமோஸும் ஒரு காரணம். அமோஸின் உழைப்பு அதற்கு பின்னால் இருந்தது” என தெரிவித்துள்ளார்.