’லஷ்மி’ படத்தில் இடம்பெற்ற ’மொராக்கா’ பாடலில் ஆடும் தித்யா பாண்டே போலவே டிவியைப் பார்த்து க்யூட் நடனம் குழந்தை ஒன்று டிவியை உடைத்த வீடியோ வைரல் ஹிட் அடித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பாண்டே நடிப்பில் ‘லஷ்மி’ திரைப்படம் வெளியானது. நடனத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் ஒரிஜினல் டான்சரான சிறுமி தித்யா பாண்டே நடித்து நடனத்தில் தெறிக்கவிட்டார். இப்படத்தில் இடம்பெற்ற மொராக்கா பாடல் தித்யாவின் நடனத்திற்காக பெரிதும் பாராட்டப்பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் பாடலை வீட்டிலுள்ள டிவியில் பார்க்கும் குழந்தை அதேபோல நடனம் ஆடிக்கொண்டிருக்கிறது. அப்போது, பாடலில் தித்யா பேருந்து கம்பியை பிடித்து தொங்குவது போன்று நடன அசைவு வரும். அதேபோல், நடனமாட விரும்பிய குழந்தை மேசை மீது இருந்த டிவியை பிடித்து தொங்குகிறது. அதில், குழந்தை மீது டிவி விழுந்தது.
நல்வாய்ப்பாக குழந்தைக்கு காயங்கள் ஏற்படவில்லை. குழந்தை ஆடும் வீடியோவை ஆசையாக வீடியோ எடுத்த பெற்றோருக்கு க்ளைமேக்ஸில் தங்களது குழந்தை ஆர்வத்தில் டிவியை உடைப்பார் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எவ்வளவு கவலை இருந்தாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இந்தக் குழந்தையின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது