சினிமா

உலக இசைப் பயணம் போகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

உலக இசைப் பயணம் போகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

webteam

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவிற்கு இசையமைக்க வந்து 25 வருடங்கள் முடிவடைந்துள்ளன. அதனையொட்டி அவர் உலக அளவில் இசை நிகழ்ச்சிகள் நடந்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் ரஹ்மான் கையில் மெர்சல், சங்கமித்ரா, 2.0 போன்ற பெரிய படங்கள் உள்ளன. இதில் மெர்சல் முடிந்துவிட்டது. அடுத்த வருடம் தான் சங்கமித்ரா ஷூட்டிங் தொடங்க உள்ளது. ரஜினியின் 2.0 வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இனி அவர் ஏற்க போகும் புதிய படங்களின் பட்டியல் என்ன என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளன.

இதற்கு நடுவில் அவரது ரசிகர்கள் 25 ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக அழைப்பு விடுத்து வருகிறார்கள். அவரும் அதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளி வந்துள்ளது. இதற்கிடையில் இதுகுறித்து பேசிய ரஹ்மான், “தமிழ்சினிமா என்பது பெரிய துறை. அது என்னிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. அதை மிக அழகான வன்முறை என்பேன். ஒரே வருடத்தில் என்னால் நிறைய பெரிய படங்களை செய்ய முடியாது. ஒரு வருடத்தில் சில படங்களை மட்டுமே என்னால் செய்ய முடியும். எந்தளவுக்கு தேவையோ அந்தளவுக்கு மட்டுமே செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.