சினிமா

விஜய் படம் எப்படி இருக்கும்? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

விஜய் படம் எப்படி இருக்கும்? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

webteam

மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.  இதன் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். 

துப்பாக்கி, கத்தி படங்களின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவது பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘துப்பாக்கி படம் பண்ணும்போது, ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் இயக்குகிறோம் என்கிற பயம் இருந்தது. ’கத்தி’ பண்ணும்போது, அது தொடர்ந்தது. இப்போது புதுமையாக என்ன செய்யப் போகிறோம் என்கிற அழுத்தம் இருக்கிறது. இது சவாலானதுதான். அந்தப் படம் வழக்கமானது அல்ல. இதுவரை காட்டப்படாத விஜய்யை, வேறோரு கோணத்தில் காண்பிக்க வேண்டும். இப்போது ஸ்பைடர் படத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது. இன்னும் 10 நாள் வேலை இதில் பாக்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் நடந்தாலும் விஜய் நடிக்கும் படத்தின் வேலையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறேன். ஸ்பைடர் முடிந்த பின் தான், அந்தப் படத்தில் முழுமையாக ஈடுபடுவேன்’ என்றார்.