ரஜினியின் ‘தர்பார்’ படத்தை காண அவரது ஜப்பான் ரசிகர்கள் இருவர் சென்னை வந்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அதற்கான 48 மணிநேர கெளண்ட் டவுன் ஆரம்பமாகியுள்ளதால் ரஜினியின் ரசிகர்கள் ‘ஹேப்பி மோட்’டில் உள்ளனர். திரையரங்கத்தில் படம் வெளியாக போகும் கடைசிநேர கொண்டாட்டத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டுள்ளனர். டிக்கெட் கேட்டு பலர் செய்தி போடுவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து இரண்டு ரசிகர்கள் இந்தியா வந்துள்ளனர். ட்விட்டரில் நிகிலேஷ் சூர்யா என்பவர் ஜப்பான் ரசிகர்கள் படம் பார்க்க காத்துக் கொண்டிருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள படத்தில் ஜப்பான் யசுதா ஹிடெதோஷி பாபா ஸ்டைலில் விரலில் முத்திரை காட்டிக் கொண்டு நிற்கிறார். வெறித்தனமான ரசிகர் என அதில் கூறப்பட்டுள்ளது. அதுவும் முதல் நாள் முதல் காட்சி ‘ரோகிஹினி சில்வர்’ திரையரங்கில் பார்க்க இருப்பதாக செய்தி பகிரப்பட்டுள்ளது.