சினிமா

‘காலா’ நாயை 2 கோடிக்கு வாங்க முன்வந்த ரசிகர்

‘காலா’ நாயை 2 கோடிக்கு வாங்க முன்வந்த ரசிகர்

webteam

‘காலா’திரைப்படத்தில் நடித்த நாயை 2 கோடி ரூபாய்க்கு வாங்க ரசிகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டியிருக்கும் படம் ‘காலா’. இந்தப்படத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. ரஜினி வீட்டில் வளரும் நாயாக கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. காலாவில் நடித்த அந்த நாயை வாங்க மலேசிய ரசிகர் ஒருவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். 2 கோடி ரூபாய் வரை விலை கொடுக்கவும் அவர் தயாராக இருந்துள்ளார்.  ஆனால் அதனை விற்கப்போவதில்லை என்கிறார் நாயின் உரிமையாளர் சைமன்.

தனது குழந்தை போல், அந்த நாயை வளர்த்து விட்டதால், விற்க மனம் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளார். விலங்கின ஆர்வலரான சைமன், சினிமாவில் நடிக்கும் விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியைச் செய்து வருகிறார்.