சினிமா

நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார்..!

நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார்..!

kaleelrahman

நடிகர் நடிகையை தரக்குறைவாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நடிகை மீரா மிதுனின் வலைதள பக்கங்களில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜயை பற்றி பல விமர்சனங்களை வைத்திருந்தார். இதைக் கண்டித்து நடிகர்கள் சூர்யா மற்றும் விஜயின் ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.


இந்த விமர்சனங்களை கண்டித்த மீரா மிதுன் நடிகர் சூர்யா மற்றும் விஜயின் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

இப்படி  கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கலாம் சேவை மையம் சார்பில் வழக்கறிஞர் சம்பத் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.