சினிமா

விஜய் சேதுபதியின் 96.. பூஜை போட்டு ஆரம்பிச்சாச்சு

விஜய் சேதுபதியின் 96.. பூஜை போட்டு ஆரம்பிச்சாச்சு

Rasus

’ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘96’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குநர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குநர் லஷ்மண், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர். காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.