வயதான தம்பதி ஒருவருக்கொருவர் காதல் பாடல்களை பாடிக்கொள்வது ட்விட்டரில் வைரல் ஆகிவருகிறது. கொரோனாவால் உலகம் முழுக்க மக்கள் வீட்டிற்கு முடங்கியிருக்கிறார்கள். இதனால், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் உருவாகி குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வயதான கணவன் மனைவி டூயட் பாடுவது மனமுறிவில் இருக்கும் தம்பதிகளுக்கு அன்பையும் நேசிப்பையும் ஊட்டுவதாக அமைந்திருக்கிறது இந்த வைரல் வீடியோ.
அதுவும் அந்த வீடியோவில் ஐ லவ் எட்டி… ஐ லவ் ஃப்ரனி என்று ஒருவருக்கொரு காதல் மழையில் நனைந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
அமெரிக்க பத்திரிகையாளர் காரா ஸ்விஷர் இந்த வீடியோவை நெகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருந்துள்ளார். இந்த வீடியோவில் டூயட் பாடும் தம்பதி வேறு யாருமல்ல அவரது தோழியின் வயதான அப்பா –அம்மாதான். அமெரிக்காவில் திருமணமாகி 73 வருடங்களாக மகிழ்ச்சியோடு வாழ்ந்துவரும் 90 ப்ளஸ் தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.