71வது தேசிய திரைப்பட விருதுகள்  web
சினிமா

71வது தேசிய திரைப்பட விருதுகள்| ’ஷாருக் கான் to எம்.எஸ்.பாஸ்கர்’ - யாருக்கு என்னென்ன விருதுகள்?

71வது தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் இன்று திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

Rishan Vengai

ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் திரைக்கலைஞருக்கு இன்று வழங்கப்பட்டன.

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய திரைப்பட விருதுகளை திரைக்கலைஞர்களுக்கு வழங்கினார்.

சிறந்த இசையமைப்பாளர்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ’வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

சிறந்த பின்னணி இசை

அனிமல் திரைப்படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றார் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்.

சிறந்த துணை நடிகை

’உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்றார் நடிகை ஊர்வசி.

சிறந்த துணை நடிகர்

2023ம் ஆண்டு தமிழ் மொழியின் வெளியான "பார்க்கிங்" திரைப்படத்தில் நடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதிய பார்க்கிங் திரைப்படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் , இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடி போகும் போது கார் நிறுத்துவதில் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சிறந்த திரைக்கதை ஆசிரியர்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதை பெற்றார் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்

சிறந்த தமிழ் திரைப்படம்

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ படத்திற்காக தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த நடிகர்

இந்தியில் ஜவான் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் ஷாருக் கான்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான விருதை திருமதி சாட்டர்ஜி vs நார்வே படத்திற்காக நடிகை ராணி முகர்ஜி பெற்றுக்கொண்டார்.

சிறந்த இயக்குநர் 

தி கேரளா ஸ்டோரி படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் சுதிப்தோ சென்.

சிறந்த துணை நடிகர்

பூக்காலம் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை வென்றார் விஜயராகவன்.

சிறந்த துணை நடிகை

வாஷ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றார் ஜான்கி போடிவாலா

தாதா சாகேப் பால்கே

திரைத் துறைக்கு வாழ்நாள் பங்களிப்பு செய்தமைக்காக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.