வசந்தமாளிகை
வசந்தமாளிகை PT
சினிமா

வெள்ளிவிழா காவியத்தின் பொன்விழா பயணம்.. HD வடிவில் ரீ ரிலீஸ் ஆனது ”வசந்த மாளிகை”! ரசிகர்கள் உற்சாகம்

PT WEB

51 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த காதல் காவியமான "வசந்த மாளிகை" திரைப்படம் இன்று (ஜூலை 21 தேதி) ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 2013 மற்றும் 2019ம் ஆண்டு இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இன்று வெளியாகிறது. படம் வெளியாவதையொட்டி சென்னை நகரின் பல பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படத்தினை டி.ராமாநாயுடு தயாரித்து கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கிருப்பார். இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா மற்றும் பலர் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

விமானத்தில் தொடங்கும் “மானிட ஜாதியே” என்ற பாடலுடன் சிவாஜி கணேசனின் கண்களில் இருந்து நடிப்பை பொழிந்திருப்பார். இதில் ஆனந்த் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனும், லதா என்ற கேரக்டரில் வாணிஸ்ரீயும் நடித்திருப்பார்கள்.

திரைப்படத்தில் பணக்கார இளைஞரான ஆனந்த் விளையாட்டு குணம் கொண்டவராகவும், போதைக்கு அடிமையானவராகவும் இருப்பார். விமான பணிப்பெண்ணாக வரும் லதா தனது தந்தை, தாய், இரண்டு சகோதரர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருவார்.

மேலும், லதாவின் அம்மாவோ அவளிடம் தொழிலை மாற்றும்படி கேட்பாள், வேலையை விட்டுவிட்டால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்ற எண்ணத்தில் வேலையினை விட மறுத்துவிடுவார் லதா. வேறொரு வேலையை தேடி நிறுவனம் ஒன்றிக்கு செல்வார்.

அங்கு லதா-வை தவறான கண்னோட்டத்தில் அணுகும் அந்நிறுவன அதிகாரி அத்துமீறிலிலும் ஈடுபடுவார். இதனை கண்டு கோபம் அடைந்த ஆனந்த் சண்டையிட்டு “சரினா யாரா இருந்தாலும் விட கூடாது, வேண்டனா, விலைமாத இருந்தாலும் தொடக்கூடாது” என்ற வசனங்களுடன் காட்சியை முடித்திருப்பார்.

இத்துடன், ஆனந்த் தனது தோட்டத்தில் விவசாயிகளை மோசமாக நடத்துவதை எதிர்க்கும்போது, ​​​​நாம் இதுவரை குடித்துவிட்டு பெண்களுடன் கேவலமாகப் பார்த்த ஒரு ஹீரோவுக்கு தேவையில்லாத பில்ட்-அப் ஆகவே நினைத்திருக்கிறோம். படத்தின் தார்மீக மையமாக இருக்கும் லதாவும், ஆனந்தை விட நல்ல மனப்பான்மை கொண்டவராக காட்டப்படுகிறார், மேலும் கடைசி நிமிடம் வரை ஆனந்தை சந்தேகித்ததற்காக அவர் மன்னிக்க மறுக்கிறார்.

மேலும், க்ளைமாக்ஸை நெருங்கும்போது, ​​அவளது குணாதிசயங்கள் மீண்டும் ஒருமுறை மாறுகிறது. ஒரு கட்டத்தில் லதா மற்றும் ஆனந்த் இவருக்குள் காதல் ஏற்பட்டுவிடக் கூடும். அது கதையை திருப்பங்களுடன் வேகத்தை தக்க வைத்துக் கொள்ள வைக்கிறது.

இத்துடன், சிவாஜியோ கோட் சூட்-வுடன் “ஏன் ஏன் ஏன்..ஒரு கின்னத்தை ஏந்துகின்றேன்” மற்றும் “யாருக்காக இது யாருக்காக” என்ற பாடல்களில் நடிப்பும் நடனமும் கலந்து நமக்குள் கொண்டாட்ட உணர்வை, காதல் சோகத்தை தூண்டிருப்பார். காதலுக்காக லதாவோ இந்த குடிகார காதலனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.

பாடல்கள் அனைத்திலும் மகிழ்ச்சி, காதல், கொண்டாட்டம், ஏக்கம் போன்றவை சிவாஜியின் நடிப்பில் கலந்து கரைந்திருக்கும். பாடலிலும், நடிப்பிலும் வசந்த மாளிகை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய படைப்பு. இது சிவாஜியின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கலாகவே உள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மீண்டும் திரைக்கு வந்துள்ள வசந்த மாளிகை படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை காண வெகு மக்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கின்றனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.