சினிமா

“400 பேருக்கு 400 கிராம் தங்கம்” - ஈஸ்வரன் படப்பிடிப்பில் சிம்பு கொடுத்த அதிர்ச்சி!

“400 பேருக்கு 400 கிராம் தங்கம்” - ஈஸ்வரன் படப்பிடிப்பில் சிம்பு கொடுத்த அதிர்ச்சி!

webteam

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஈஸ்வரன் படப்பிடிப்பில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை நடிகர் சிலம்பரசன் வழங்கியுள்ளார். 

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சிகளைக் மேற்கொண்டு, அவரது எடையை குறைத்திருந்தார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது. கடந்த மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.

மேலும், படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்புகளை வழங்கினார். பரிசுகளை வழங்கிய சிலம்பரசனுக்கு நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.