சினிமா

வெளியாகிறது 3வது ’மெர்சல்’ பாடல்!

வெளியாகிறது 3வது ’மெர்சல்’ பாடல்!

webteam

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பாடிய அரசன் என்னும் மெர்சல் பாடல் அடுத்து வெளியாக இருக்கிறது.

மெர்சல் படத்தில் முதல் பாடலான "ஆளப்போறான் தமிழன்" பாடல் கடந்த வாரம் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய நீதானே.. மெலோடி பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மெர்சல் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரசன் எனத் தொடங்கும் இந்தப்பாடலை விஜய்க்காக பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.