ஜோசப் கிளிண்டன் இயக்கியுள்ள சீரிஸ் `AIR'. பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் கதை.
Tom Sturridge நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் `The Sandman S2'. இழந்த தன் சக்தியை மீட்க போராடும் ஒருவனின் கதை.
ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்திருக்கும் சீரிஸ் `குட் வைஃப்'. ஒரு குடும்பத்த தலைவி, வக்கீலாக நடத்தும் சட்ட போராட்டமே கதை.
நாகேஷ் இயக்கியுள்ள சீரிஸ் `The Hunt'. ராஜீவ் காந்தி கொலை சம்பந்தப்பட்ட சீரிஸாக உருவாகியிருக்கிறது.
Ilya Naishuller இயக்கத்தில் John Cena, Idris Elba, Priyanka Chopra நடித்துள்ள படம் `Heads of State'. லண்டன் - அமெரிக்க பிரசிடெண்ட் சம்பந்தப்பட்ட விஷயத்தை சமாளிக்கும் டீமின் கதை.
Victoria Mahoney இயக்கியுள்ள படம் `The Old Guard 2'.சாவே இல்லாத சில வீரர்கள் அநீதிக்கு எதிராக போராடுவதே கதை.
அணி சசி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுஹாஸ் நடித்துள்ள படம் `Uppu Kappurambu'. ஊர் சுடுகாட்டில் உருவாகும் பிரச்சனை, அதை தீர்க்க முயற்சிக்கும் ஊர் தலைவி மற்றும் சுடுகாட்டு பராமரிப்பாளரின் கதை.
மதுமிதா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள படம் `Kaalidhar Laapata'.ஒரு சிறுவனுக்கும், அவனுக்கு திடீரென அறிமுகமாகும் ஒரு நபருக்கும் மேற்கொள்ளும் பயணமே கதை
Brady Corbet இயக்கிய படம் ` The Brutalist'. கட்டுமான துறையை சேர்ந்த கணவன் - மனைவி இணைந்து உருவாக்கும் விஷயங்களே படம்.
Drew Hancock இயக்கிய படம் `Companion'. ஒரு பணக்காரரின் மரணம், ஐரிஷ் மற்றும் அவளது நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் - சிம்பு நடித்த படம் `தக் லைஃப்'. ஒரு கேங்க்ஸ்டர் குழுவினிடையே நடக்கும் அதிகாரப் போராட்டங்களே கதை.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளிவெங்கட், ரோஷினி நடித்த படம் `மெட்ராஸ் மேட்னி'. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சம்பவங்களே கதை.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா, சைத்ரா நடித்துள்ள படம் ` 3BHK'. சொந்த வீடு வாங்க, ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளே கதை.
ராம் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் `பறந்து போ'. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உணர்வுகளை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.
அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்துள்ள படம் `ஃபீனிக்ஸ்'. ஒரு இளைஞனுக்கு வரும் பிரச்சனையே கதை.
உதய்குமார் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடித்துள்ள படம் `அஃகேனம்'. ஒரு கேப் ஓட்டுநர் - விடுதலையான கைதி இருவருக்கும் நடக்கும் சம்புபவங்களே கதை.
சுந்தர் இயக்கியுள்ள படம் `அனுகிரகன்'. டைம்ட்ராவலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.
வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நிதின் நடித்துள்ள படம் `Thammudu'. அக்கா - தம்பி பற்றிய பாசத்தை, த்ரில்லர் கலந்து சொல்லும் அட்வெஞ்சர் கதை.
அனுரங் பாசு இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், சாரா அலிகான் நடித்துள்ள படம் `Metro... In Dino'. இது அனுரங் பாசு இயக்கத்தில் 2007ல் வெளியான Life in a... Metro படத்தின் சீக்குவலாக உருவாகியுள்ளது.
Gareth Edwards இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Jurassic World: Rebirth'. Jurassic World Dominion படத்தின் நிகழ்வுகளுக்கு ஐந்து வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவங்களே கதை.