சினிமா

பைக் விபத்து: ’300 பருத்தி வீரர்கள்’ ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்!

பைக் விபத்து: ’300 பருத்தி வீரர்கள்’ ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்!

webteam

’டிராகுலா 2000’, ’300’, ’த அக்லி ட்ரூத்’, ’காட்ஸ் ஆப் எகிப்து’ உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஜெரார்ட் பட்லர் (47). இவர் நடித்த ’300’ படம் தமிழில், ’300 பருத்திவீரர்கள்’ என்ற பெயரில் டப் ஆகி வெளியானது. 
லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்துவரும் ஜெரார்ட் பட்லர், பைக் ஓட்டுவதை அதிகம் விரும்புபவர். ஹார்லி டேவிட்சன் பைக்கில் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவருக்கு எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
2011-ல் நடந்த பைக் விபத்தில் இவர் பலத்த காயம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.