சினிமா

23ம் புலிகேசி-2 படத்தில் 3 வடிவேலு!

23ம் புலிகேசி-2 படத்தில் 3 வடிவேலு!

webteam

 சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக உள்ள 23ம் புலிகேசி -2 படத்தில் வடிவேலு 3 கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அப்படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் வடிவேலு மூன்று கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் வடிவேலு இரண்டு கேரக்டர்களில் நடித்து இருந்தார்.