சினிமா

புறப்பட்டது 23ம் புலிகேசி-2 படை!

புறப்பட்டது 23ம் புலிகேசி-2 படை!

webteam

இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ம் பாகத்தின் போட்டோ ஷூட் முடிந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு  தொடங்க இருக்கிறது. 

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மாபெரும் வெற்றி பெற்றது. காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு இந்தப் படத்திற்குப் பிறகுதான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் 23ம் புலிகேசிக்குப் பிறகு எந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விஜய்யை வைத்து புலி படத்தையும் வேறு சில படங்களையும் இயக்கிய சிம்புதேவனும் தோல்வியால் துவண்டு வந்தார். இந்நிலையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் வடிவேலுவை வைத்து சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். 23ம் புலிகேசி முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் லைகா நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். 

23ம் புலிகேசி - 2 படத்திற்காக சென்னையை அடுத்துள்ள ஈவிபியில் செட் போடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.