Peter Hoar இயக்கியுள்ள சீரிஸ் `Boots'. வற்புறுத்தலின் பேரில் ராணுவத்தில் சேரும் ஒருவன், தன்னைப் பற்றி புரிந்து கொள்வதே கதை.
Ujaan Ganguly இயக்கியுள்ள சீரிஸ் `Kurukshetra'. குருக்ஷேத்திர போரின் 18 நாட்களை 18 வீரர்களின் பார்வையில் இருந்து சொல்லும் கதை.
Rohan Sippy இயக்கத்தில் கொங்கனா சென் ஷர்மா நடித்துள்ள சீரிஸ் `Search: The Naina Murder Case'. அரசியல்வாதி காரில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார் என்ற விசாரணையே கதை.
Simon Stone இயக்கத்தில் Keira Knightley நடித்துள்ள படம் `The Woman in Cabin 10'. சொகுசு கப்பல் ஒன்றில் எழுத்தாளர் ஒருவர் தெரிந்து கொள்ளும் ரகசியமும், அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்களுமே கதை.
ஜெயந்த் திகம்பர் இயக்கியுள்ள படம் `A Match'. திருமண சந்தையில் ஒரு பெண் சந்திக்கும் விஷயங்களை சுற்று நகர்கிறது இப்படம்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடித்த படம் `War 2'. ஏஜெண்டுக்கும் அவரை அழிக்க வருபவனுக்குமான போராட்டமே கதை.
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா நடித்த படம் `பாம்'. ஊருக்குள் நிகழும் ஒரு இறப்பும், அதை தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை.
சத்யராஜ் நடித்த படம் `Tribanadhari Barbarik'. பழமையான போராளி ஒருவன் நிகழ்காலத்துக்கு வந்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய படம் `Mirai'. அரக்கனை அழிக்க கிளம்பும் ஒரு இளைஞனின் கதை.
கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த்த நடித்துள்ள படம் `மருதம்'. கடன் தொல்லையால் அவதிப்படும் ஒரு விவசாயியின் கதை.
அருள் அஜித் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், ஷிவதா நடித்துள்ள படம் `கயிலன்'. பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
வெங்கட் இயக்கத்தில் ரஞ்சித் நடித்துள்ள படம் `இறுதி முயற்சி'. கடன் தொல்லையில் இருந்து தப்ப நினைக்கும் ஹீரோவின் கதை.
சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால் நடித்துள்ள படம் `வில்'. சொத்து பிரச்சனையை மையப்படுத்திய கதை.
ஆர்யன் இயக்கியுள்ள படம் `Constable'. காசி புதிதாகா செல்லும் மோகிலா பகுதியில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிப்பதே கதை.
சென்னா ஹெக்டே இயக்கியுள்ள படம் `Avihitham'. ஆணாதிக்க கிராமம் ஒன்றில், பிறரின் உறவுகள் பற்றி புறணி பேசும் இளைஞர்கள் பற்றியும் அதைப் பற்றிய சமூக பார்வையையும் பகடியாக சொல்லும் கதை.
Joachim Rønning இயக்கியுள்ள படம் `Tron: Ares'. 2010ல் வெளியான `Tron: Legacy' படத்தின் சீக்குவலாக உருவாகியுள்ளது. புத்திசாலித்தனமான Ares என்ற புரோக்ராம் நிஜ உலகத்திற்கு வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
Anshuman Jha இயக்கியுள்ள படம் `Lord Curzon Ki Havdi'. நான்கு புலம்பெயர் இந்தியர்கள், லண்டனில் ஒரு பார்ட்டியில் சந்தித்து கொள்கிறார்கள். பார்ட்டியின் இறுதியில் அவர்களின் வாகனத்தில் ஒரு பிணம் கிடக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
Benny Safdie இயக்கத்தில் Dwayne Johnson, Emily Blunt நடித்துள்ள படம் `The Smashing Machine'. Mark Kerr என்ற மல்யுத்த வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது படம்.