Theatre and OTT release Thamma, OG, Sakthi Thirumagan
சினிமா

ராஷ்மிகாவின் `Thamma' முதல் Josh Boone-ன் `Regretting You' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் ஆயுஷ்மான் - ராஷ்மிகா நடித்துள்ள `Thamma' முதல் `The Fault in Our Stars' இயக்குநர் Josh Boone இயக்கியுள்ள Regretting You வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Harlan Coben’s Lazarus (English) Prime - Oct 22

Harlan Coben’s Lazarus

Harlan Coben, Danny Brocklehurst உருவாக்கியுள்ள சீரிஸ் `Harlan Coben’s Lazarus'. தன் தந்தையின் இறப்புக்காக சொந்த ஊருக்கு வரும் ஒரு forensic நிபுணர், அங்கு ஒரு கொலை வழக்கை விசாரிப்பதே கதை.

OTT: A House of Dynamite (English) Netflix - Oct 24

A House of Dynamite

Kathryn Bigelow இயக்கத்தில் Idris Elba, Rebecca Ferguson நடித்துள்ள படம் `A House of Dynamite'.அமெரிக்காவின் மீது ஒரு ஏவுகணை ஏவப்பட, அதற்கு காரணமானது யார் என விசாரிப்பதே கதை.

Post Theatrical Digital Streaming: Valsala Club (Malayalam) manorama MAX - Oct 19

Valsala Club

அனுராஜ், அனுஷா மோகன் இயக்கிய படம் `Valsala Club'. அரவிந்தனின் திருமணத்தை நிறுத்த ஒரு குழுவும், நடத்த ஒரு குழுவும் செய்யும் காமெடி கலாட்டாக்கள் கதை.

Chattuli (Malayalam) manorama MAX - Oct 20

Chattuli

பாபு ராஜ் இயக்கிய படம் `Chattuli'. பழிவாங்கும் படலமொன்றில் நடக்கும் விஷயங்களே கதை.

Mirage (Malayalam) SonyLIV - Oct 20

Mirage

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி நடித்த படம் `Mirage'. காதலன் விபத்து ஒன்றில் இறந்து போன பின், அவர் பற்றி மர்மங்களும், பகையும் அபிராமியை துரத்துகிறது. அதிலிருந்து அவர் தப்ப எடுக்கும் முயற்சிகளே கதை.

Vash Level 2 (Gujarati) Netflix - Oct 22

Vash Level 2

கிருஷ்ணதேவ் இயக்கிய படம் `Vash Level 2'. 2023ல் வெளியான Vash படத்தின் நிகழ்வுகளுக்கு 12 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களே கதை.

OG (Telugu) Netflix - Oct 23

OG

சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த படம் `OG'. தன்னுடைய பழியை தீர்ப்பதற்காக மீண்டும் மும்பை வரும் டான் பற்றிய கதை.

Shakthi Thirumagan (Tamil) Jio Hotstar - Oct 24

Shakthi Thirumagan

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் `சக்தித் திருமகன்'. புத்திசாலி ஒருவன் ஆடும் அரசியல் ஆட்டமே கதை.

Theatre: Ek Deewane Ki Deewaniyat (Hindi) - Oct 21

Ek Deewane Ki Deewaniyat

மைலாப் ஸாவேரி இயக்கியுள்ள படம் `Ek Deewane Ki Deewaniyat'. விக்ரமாதித்யா - அடா இடையேயான காதலே கதை.

Thamma (Hindi) - Oct 21

Thamma

ஆதித்யா இயக்கத்தில் ஆயுஷ்மான், ராஷ்மிகா நடித்துள்ள படம் `Thamma'. தான் காதலிக்கும் ரத்தக்காட்டேரிக்காக தானும் ரத்தக்காட்டேரியாகும் வினோத கதை.

Nellikkampoyil Night Riders (Malayalam) - Oct 24

Nellikkampoyil Night Riders

நௌஃபல் இயக்கத்தில் மேதிவ் தாமஸ் நடித்துள்ள படம் `Nellikkampoyil Night Riders'. ஷ்யாம் என்ற இளைஞன் ஊரில் உள்ள மர்மத்தை முறியடிக்க போராடுவதே கதை.

Regretting You (English) - Oct 24

Regretting You

Josh Boone இயக்கியுள்ள படம் `Regretting You'. மார்கன் க்ராண்ட் மற்றும் அவரது பதின் வயது மகள் க்ளாரா இடையேயான உறவில் வரும் சிக்கல்களை பற்றி பேசும் படம்.