பிரபல வீடியோ தளமான யூடியூப், 2017 ஆம் ஆண்டில் ட்ரெண்ட் அடித்த டாப் 10 வீடியோஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கிற்கு பிறகு, இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நிறுவனம் யூடியூப். புதிதாக வரும் படங்களின் டீசர்,
ட்ரெய்லர், பாடல் என அனைத்து விதமான வீடியோக்களையும் இதில் பார்க்கலாம். யூடியூப்பில் இடம்பெறும் வீடியோக்கள் ட்ரெண்ட் அடித்தால் அதைகொண்டாடும் கூட்டமும் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் இந்த யூடியூப் நிறுவனம், உலகளவில் இந்த வருடத்திற்கான டாப் 10 ட்ரெண்டிக் வீடியோ சாங்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், லூயிஸ் ஃபோன்ஸிவின் ஸ்பானிஷ் பாடலான "டெஸ்பாட்டோ" பாடல் வீடியோ முதலிடம் வகிக்கிறது. இந்தப் பாடல் யூடியூப்பில் 4.4
பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதே போல் பாலிவுட் மூவி பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் இருந்து ’டம்மா டம்மா’
பாடல்களும் முதல் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதிகம் பேசப்பட்டவை, பெற்ற லைக்ஸ், போடப்பட்ட கமண்ட்ஸ் இவைகளை கருத்தில்
கொண்டு இந்தத் தரப்பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் வைரலான டாப் 10 வீடியோக்களின் பட்டியல் அனைவரின்
கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிகம் வைரலான, ட்ரெண்ட் அடித்த டாப் 10 வீடியோ பாடலின் பட்டியல் இவை:
1. Group Study By BB ki Vines (19 million views)
2. Jimikki Kammal dance performance by Indian School of Commerce (19 million views)
3. Ed Sheeran- Shape Of You Choreography By Kyle Hanagami (119 million views)
4. Chacha Ke Patake By Make Joke Of (18 million views)
5. That dumb friend in every group By Amit Bhadana (11 million views)
6. Unique rangoli design By Rangoli by Pooja Totala (9.3 million views)
7. Kangana Ranaut's interview to a Hindi TV channel (9.8 million views)
8. Cheez Badi Dance Cover By Mustafa & Kiara (13 million views)
9. Mehndi design By MehndiArtistica (12 million views)
10. Life Mein Chahiye Izzat By Zakir Khan (11 million views)