சினிமா

தியேட்டர்களில் நாளை 2 கட்சிகள் ரத்து

தியேட்டர்களில் நாளை 2 கட்சிகள் ரத்து

Rasus

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை இரண்டு கட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இரவு, பகல் பாராமல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இளைஞர்கள், கல்லூரி பெண்கள், குழந்தைகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலதரப்பு மக்களும் பங்கேற்று நாளுக்கு நாள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை (20.01.2016) காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.