பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கரின் மிக பிரம்மாண்டமான படம் 2.0, இந்த
படத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் விளம்பர வேளைகளை தொடங்கி இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின்
விளம்பர வேலைகள் தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த
வகையில், 12 கிலோ மீட்டர் நீள நூலைக் கொண்டு தயாரித்த துணியில், ரஜினியின்
உருவம் பொறிக்கப்பட்டு பிரம்மாண்ட விளம்பரம் தயாராகி வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 600 மணி நேரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் 2.0
புரமோஷனுக்காக படக்குழுவினர் சர்வதேச சுற்றுலா செல்ல உள்ளதாகவும் தயாரிப்பு
நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான
டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் எனக் கருதப்படுகிறது. இதற்கென சென்னையில்
பிரம்மாண்ட விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் படத்திற்கு பின்னணி
இசையமைக்கும் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் வேகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.