சினிமா

நாளை 2.ஓ படத்தின் மேக்கிங் வெளியீடு

நாளை 2.ஓ படத்தின் மேக்கிங் வெளியீடு

webteam

நாளை ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் மேக்கிங் காட்சிகளை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் அமோக வெற்றியை அடைந்தது. அதனையொட்டி அதன் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அதற்கு 2.ஓ என்று தலைப்பிட்டிருந்தார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுவாக ஷங்கர் தன் படம் வெளி வரும் வரை சின்ன செய்தியை கூட கசிய விடமாட்டார். ஆனால் இந்த முறை பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. 2.ஓவின் மேக்கிங் காட்சிகளை அவர் நாளை வெளியிட உள்ளார். அதனை அப்படத்தில் நடித்துள்ள அக்சய் குமார் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

அதில் 2.ஓ அனுபவத்தினை பெற தயாராகுங்கள். 3டியில் தயாராகியுள்ள மேக்கிங் காட்சிகளை நாளை மாலை 6 மணிக்கு வெயிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.