ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகும் படம், ‘2.o’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில், ’2.o’ படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தார் எமி ஜாக்சன். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
‘படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் சில பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருக்கிறது’ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.