சினிமா

பிரபாஸூடன் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரியை இணைத்து வதந்தி: 2 பேர் கைது!

பிரபாஸூடன் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரியை இணைத்து வதந்தி: 2 பேர் கைது!

webteam

பிரபல நடிகர் ’பாகுபலி’ பிரபாஸூடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியை இணைத்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியதாக, கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் கணவர், அனில் குமார். இருவரும் கடந்த மாதம் 14 ஆம் தேதி, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் தன்னையும், நடிகர் பிரபாஸையும் இணைத்து சிலர் வதந்தி பரப்பியுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக் கை எடுக்க வேண்டும் என்றும் ஷர்மிளா கூறியிருந்தார்.

இதுபோன்ற வதந்திக்குப் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது என்று ஜெகன்மோகன் ரெட்டியும் ஷர்மிளாவும் புகார் கூறியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டை, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மறுத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் குண்டூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வர ராவை போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய் தனர். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ படித்துவருகிறார். இதையடுத்து மற்றொருவரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.